பாலிவுட்

‘விக்ரம் வேதா’ ஏன் பெண் கதாபாத்திரங்களாக இருக்கக் கூடாது? - கேட்கிறார் ராதிகா ஆப்தே

செய்திப்பிரிவு

தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ இந்தியிலும் அதே பெயரில் வெளியாகி இருக்கிறது. தமிழில் இயக்கிய புஷ்கர் - காயத்ரி அங்கும் இயக்கியுள்ளனர். ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலிகான், ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 30-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் நடித்துள்ள ராதிகா ஆப்தே கூறும்போது, “இது சிறந்த படம். நீங்கள் பல படங்களில் நடித்திருக்கலாம். ஆனால், அந்தப் படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஆனால், இந்தப்படத்தில் என் கேரக்டர் சிறியது என்றாலும் பிடித்திருந்தது. சினிமாவில் உங்கள் திறமை எதுவாக இருந்தாலும், உங்கள் வணிக நம்பகத்தன்மை, வெற்றியை பொறுத்தே அமைகிறது. எனக்கு அதிக காட்சிகள் இருக்கும் படங்களையே நான் விரும்புகிறேன். இதன் படப்பிடிப்பில் கூட இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரியிடம், ‘விக்ரம் வேதா’ ஏன் பெண் கதாபாத்திரங்களாக இருக்கக் கூடாது? என்று நகைச்சுவையாகக் கேட்டேன். அவர்கள் அடுத்த முறை பார்க்கலாம் என்றார்கள். அவர்களுடன் பணிபுரிந்தது பிடித்திருந்தது’’என்றார்.

SCROLL FOR NEXT