ஆயுஷ்மான் குரானா 
பாலிவுட்

“தயாரிப்பாளரிடம் நான் வாங்க மறுத்த ப்ளாங் செக்...” -  ஆயுஷ்மான் குரானாவின் பகிர்வு

செய்திப்பிரிவு

தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் வந்து ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்தது குறித்து தனது கடந்த காலத்தை பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நினைவுகூர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஆயுஷ்மான் குரானா. தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கும் அவர், அண்மையில் வடகிழக்கு மாநில மக்கள் சந்திக்கும் துயரங்களை வெளிப்படுத்தும் 'அனேக்' படத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தனது படத் தேர்வு குறித்து பாலிவுட் ஹங்கம்மாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ''எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அப்போது தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் ப்ளாங்க் செக் ஒன்றை கொடுத்துவிட்டு, 'உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு 3 படத்தில் நடித்துக் கொடுங்கள். நாங்கள் படத்தின் ஸ்கிரிப்டை விரைவில் எழுதி தருகிறோம்' என்றார். அதற்கு நான் அவரிடம், 'லக்ஷ்மியை விட சரஸ்வதி முக்கியம்' என்றேன். “நான் பின்னடைவான எதையும் செய்ய விரும்பவில்லை. எனது மனநிலையை மாற்ற முடியாது.

முற்போக்கான படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா ஒரு மாற்றத்திற்கான ஊடகம் என நான் நம்புகிறேன். எப்பொழுதும் வழக்கத்திற்கு மாறான கதைகளை செய்யவே விரும்புகிறேன். அப்படியான படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியமான நினைக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT