பாலிவுட்

மதுரையில் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடிய கேத்ரீனா கைஃப் - வைரல் வீடியோ

செய்திப்பிரிவு

மதுரையில் உள்ள பள்ளி ஒன்றில் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் 'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடும் காணொலி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மதுரையில் உள்ள மவுன்டைன் வியூ பள்ளி கடந்த 2105-ம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃபின் தாயார் சுசான்னே பள்ளியுடன் நீண்டகாலமாக தொடர்பில் இருக்கிறார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தும் வருகிறார். அதேபோல நடிகை கேத்ரீனா கூட பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, பாரபட்சமற்ற தரமான கல்வி குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் உள்ள மவுன்டைன் வியூ பள்ளியில் நடிகை கேத்ரீனா பள்ளி மாணவர்களுடன் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT