பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கிவருகிறார் அட்லீ. இதில்,நயன்தாரா நாயகி. அவர் விசாரணை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. சான்யா மல்கோத்ரா,சுனில் குரோவர், பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். பான் இந்தியா முறையில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது. இதில், நடிகர் விஜய் மற்றும் தீபிகா படுகோன் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தீபிகா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஷாருக்கான், அட்லீயுடன் அவரும் சென்னை வந்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும் படப்பிடிப்பில் நேற்று அவர் கலந்துகொண்டார். இந்த மாத இறுதியில் விஜய் சேதுபதி இதன் ஷூட்டிங்கில் இணைகிறார்