பாலிவுட்

தயாராகிறது சில்க் ஸ்மிதா கதையின் 2ம் பாகம்

செய்திப்பிரிவு

தனது கண்களாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. 1980 மற்றும் 90களில் அனைவரும் விரும்பும் நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து, இந்தியில், ’தி டர்டி பிக்சர்’ என்ற படம் உருவானது. இதில் வித்யாபாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார்.

இம்ரான் ஹாஸ்மி, நஸ்ருதின் ஷா, துஷார் கபூர் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை மிலன் லுத்ரா இயக்கி இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சரியாகப் பேசப்படவில்லை என்றாலும் வசூலைக் குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாக இருக்கிறது.

இதில் சில்க் ஸ்மிதாவின் இளவயது வாழ்க்கையைச் சொல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகள் இப்போது தொடங்கியுள்ளன. முதல் பாகத்தைத் தயாரித்த ஏக்தா கபூர் இதையும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வித்யா பாலன் நடிப்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. அவரிடம் இந்தப் படத்துக்காக யாரும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT