பாலிவுட்

‘லால் சிங் சத்தா’வுக்கு எதிராக புகார்

செய்திப்பிரிவு

இந்தி நடிகர் ஆமிர்கான், கரீனா கபூர் நடித்துள்ள படம், ‘லால் சிங் சத்தா’. இது, 'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாக சைதன்யா, மோனா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 11-ம் தேதி ரிலீஸ் ஆன இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ரிலீஸுக்கு முன்பு ஆமிர்கானுக்கு எதிராகவும் இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட்டானது. தனது படத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என்று ஆமிர்கான் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இந்தப் படம் இந்திய ராணுவத்தின் மன உறுதியை குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, டெல்லியை சேர்ந்த வினித் ஜிண்டால் என்ற வழக்கறிஞர், காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதில், மனநலம் குன்றிய ஒருவரை கார்கில் போரில், ராணுவத்தில் சேர்த்ததாக இந்தப் படத்தில், சித்தரித்துள்ளனர். கார்கில் போரில் கடுமையானப் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் ஈடுபட்டது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால், இந்தப் படக்குழுவினர் இந்திய ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதற்கும், அவதூறு விளைவிப்பதற்கும், வேண்டுமென்றே இப்படிபட்ட காட்சியை உருவாக்கி இருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT