பாலிவுட்

“அவர் நடிப்பு வேற லெவல்” - தனுஷ் திறமையை சிலாகித்த கரீனா கபூர்

செய்திப்பிரிவு

'எந்த கதாபாத்திரத்தில் பார்த்தாலும், அவரும், அவரது நடிப்பும் வேறு லெவலில் இருக்கும்' என்று தனுஷின் நடிப்பு குறித்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் சிலாகித்துப் பேசியுள்ளார்.

தமிழ்ப் படங்களைத் தாண்டி, 'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அட்ராங்கி ரே' உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து, 'கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தடம் பதித்ததன் மூலம் உலக அளவில் தனுஷின் நடிப்பு பாராட்டப்பட்டது. 'கிரே மேன்' படத்தில் நடித்த ரியான் கோஸ்லிங் பேட்டி ஒன்றில் தனுஷின் நடிப்பு குறித்து பாராட்டி பேசினார்.

இந்நிலையில், ஹாலிவுட் படமான 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' படம் தொடர்பான ப்ரமோஷனில் தீவிரம் காட்டி வரும் கரீனா கபூர் நேர்காணல் ஒன்றில் தனுஷின் நடிப்பு குறித்து சிலாகித்து பேசியுள்ளார். அதில் அவர், ''தனுஷ்! என்ன ஓர் அற்புதமான நடிகர்... ஒவ்வொரு முறையும் தனுஷை எந்த கதாபாத்திரத்தில் பார்த்தாலும், அவரும் அவரது நடிப்பும் வேறு லெவலில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். ஆமீர்கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'லால் சிங் சத்தா' வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷைப் பொறுத்தவரை அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து அவரது 'வாத்தி' அக்டோபரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT