பாலிவுட்

ட்விட்டரில் 2.1 கோடி ரசிகர்கள்: மகிழ்ச்சியில் அமிதாப் பச்சன்

பிடிஐ

சமூக வலைதளமான ‘ட்விட்டரில்’ பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனை (73) பின்தொடர்வோர் எண்ணிக்கை 2.1 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010 மே மாதம் அமிதாப் பச்சன் தனது ‘ட்விட்டர்’ கணக்கை தொடங்கினார். அப்போது முதல் ‘ட்விட்டர்’ மூலம் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் முகேஷ் பட், ஸ்ரீதேவி, திலீப் குமார், மாதுரி தீக் ஷித் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அமிதாப்பை பின்தொடர்ந்து வருகின்றனர். 2015 நவம்பரில் இந்த எண்ணிக்கை 1.8 கோடியாக இருந்தபோது விரைவில் 2 கோடியை எட்ட வேண்டும் என அமிதாப் பச்சன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது 2.1 கோடியாக அதிகரித்துள்ளது.

மேலும் அதிக ரசிகர்கள் கொண்ட ஷாருக்கான் (1.96 கோடி) சல்மான் கான் (1.78 கோடி), ஆமீர் கான் (1.76 கோடி) மற்றும் பிரியங்கா சோப்ரா (1.4 கோடி) ஆகியோரையும் அமிதாப் பச்சன் பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள அமிதாப் ‘ட்விட்டரில்’ ஒஹோ என ஹேஷ்டேக்கிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT