பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் பாடகர் அரிஜித் சிங் பேஸ்புக் மூலம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். எனினும் அந்த பதிவை உடனடியாக அழித்து விட்டார்.
இந்தி திரையுலகின் முன்னணி பாடகராக வலம் வருபவர் அரிஜித் சிங். பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சுல்தான் திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில் சல்மான் கானுக்கும், அரிஜித் சிங்குக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் பேஸ்புக் மூலம் சல்மான் கானுக்கு அரிஜித் சிங் மன்னிப்பு கடிதம் அனுப்பி வைத்தார். எனினும் அந்த பதிவை உடனடியாக அவர் நீக்கிவிட்டார். அதில், ‘‘அன்புள்ள சல்மான் கான் உங்களிடம் பேசுவதற்கு நான் தேர்ந்தெடுத்த கடைசி வழி இதுவாகத் தான் இருக்கும். மொபைல் வழியாகவும், குறுஞ் செய்தி மூலமாகவும் உங்களை தொடர்பு கொள்ள முயன்றேன். உங்களை நான் அவமதித்துவிட்ட தாக தவறாக புரிந்து கொண்டுள் ளீர்கள். ஒருபோதும் நான் அப்படி செய்யவில்லை.
நான் மட்டுமல்ல எனது ஒட்டுமொத்த குடும்பத்தின ரும் உங்களது ரசிகராக இருக்கிறோம். என்ன நடந்தது என்பதை விவரிக்க பல முறை முயன்றேன். ஆனால் நீங்கள் அதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனினும் அனைவரது முன்பாகவும் உங்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். சுல்தான் படத்தில் உங்களுக்காக நான் பாடிய பாடலை தயவு செய்து நீக்கி விடாதீர்கள்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.