பாலிவுட்

விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகும் சாரா டெண்டுல்கர்?

செய்திப்பிரிவு

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா விரைவில் பாலிவுட் சினிமாவில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் லைஃப் தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. லண்டனில் மருத்துவம் படித்துள்ள சச்சின் மகள் சாரா மாடலிங் உலகிலும் பயணித்து வருகிறார். சர்வதேச பிராண்ட் ஒன்றின் ஆடைகளை விளம்பரப்படுத்திவரும் சாராவை இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர். இப்போது நடிப்பிலும் கால் பதிக்கவுள்ளார். விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பேசப்படுகிறது.

விளம்பரங்களில் நடித்தவர், நடிப்பு பயிற்சியும் எடுத்துள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரபூர்வ தகவலும் எதுவும் வெளியாகவில்லை. திருபாய் அம்பானி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சாரா, தனது தாயைப் போலவே மருத்துவம் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT