பாலிவுட்

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு விருது

பிடிஐ

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு (42) இந்த ஆண்டுக்கான குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டது. தனது மகள் ஆராத்யாவுக்கு விருதை அர்ப்பணித்த ஐஸ்வர்யா ராய், ‘‘சர்வதேச மேடையில் இந்திய பெண்மணியாக பிரதி நிதித்துவம் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகையாகவும், சிறந்த பெண் மணியாகவும் எனக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. தொழில் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை நான் தவற விடவில்லை’’ என்றார்.

இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த தொழில்முனை வோர், கலை மற்றும் கலாச்சாரம், சிறப்பு நடுவர், சர்வதேச பிரபலம், இந்திய பிரபலம் உள்ளிட்ட பிரிவு களின் கீழ் 17 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும் கவுரவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT