பாலிவுட்

ரசிகர்களுக்காக வேலைவாய்ப்பு வலைத்தளம் தொடங்கினார் நடிகர் சல்மான் கான்

செய்திப்பிரிவு

தனது ரசிகர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றை நடிகர் சல்மான் கான் ஏற்படுத்தியுள்ளார்.

பீயிங் ஹூமன்(Being human) என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றை நடத்திவரும் பாலிவுட் நடிகர் சல்மான் கான், வேலையில்லாமல் இருக்கும் தனது ரசிகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தர முயற்சி செய்துள்ளார்.

இதன் தொடக்கமாக அவர் பீயிங் ஹூமன் அமைப்புடன் இணைந்து ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தை (>http://beinghumanworkshop.com) ஏற்படுத்தியுள்ளார்.

இதனை சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இருக்கும் தனது தொழில் ரீதியிலான நண்பர்களின் உதவியோடு செயல்படுத்தி உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கான் கூறுகையில், "ஃபேஸ்புக் என்பது வெறும் பொழுதுப்போக்குக்கானது அல்ல, அதனை பயனுள்ளதாக உபயோகித்தால் வாழ்வில் உயர்வு பெற முடியும். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வேலையில்லாமல் இருக்கும் ரசிகர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இது தொடர்பாக நான் எனது நண்பர்களுடன் பேசியுள்ளேன். அவர்களை எனது ரசிகர்களின் திறமைக்கு ஏற்ப வேலை தரும்படி கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT