ஆபாசப் படங்களை எடுத்துகட்டண மொபைல் செயலிகள்மூலமாக ஒரு கும்பல் வெளியிட்டு வருவது மும்பைபோலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீஸார் கடந்த 19-ம் தேதி கைது செய்தனர்.
ராஜ் குந்த்ரா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. முதலில், போலீஸ் காவலில்வைத்து அவரிடம் விசாரிக்கமும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, ராஜ் குந்த்ராவை போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜ் குந்த்ராவை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, அவருக்கு சொந்தமான இரு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.