இந்தி நடிகை யாமி கவுதமின் வங்கிக் கணக்குக்கு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 கோடி வந்துள்ளது. இதுகுறித்து, அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின்படி (பெமா) மத்திய அரசுக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக வங்கி தரப்பில் கொடுத்த தகவலின் பேரில், அமலாக்கத் துறை யாமி மீது பெமா சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கரோனா பரவல் கட் டுப்பாடுகள் காரணமாக யாமி ஆஜராகவில்லை. இதையடுத்து, வரும் 7-ம் தேதி ஆஜராகுமாறு 2-வது முறையாக யாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.