பாலிவுட்

ஷாரூக்கானுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்?

செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது தமிழில் 'நெற்றிக்கண்', 'அண்ணாத்த', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 2003-ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானாலும், இந்தியில் நடிக்காமலேயே இருந்தார்.

இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இன்னும் படம் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை.

ஷாரூக்கானுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார் அட்லி. கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது.

தற்போது கரோனா குறைந்துவரும் சூழலில், ஷாரூக்கான் படத்தின் பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அட்லி. இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால், இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.

இன்று (ஜூன் 25) முதல் மும்பையில் 'பதான்' படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஷாரூக்கான். அதனை முடித்துவிட்டு அட்லி படத்தின் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT