பாலிவுட்

பிரியங்காவுக்கு ட்விட்டரில் 1.2 கோடி ரசிகர்கள்: ஆசியாவில் 3-வது இடம்

ஐஏஎன்எஸ்

‘ட்விட்டர்’ வலைதளத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை பின்தொடர்வோர் எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆசியாவிலேயே அதிகம் பின்தொடரப்படும் பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்துள்ளார்.

ஆசியாவில் ‘ட்விட்டர்’ வலைதளம் மூலம் அதிகம் பின்தொடர்வோர் கொண்ட பெண் பிரபலங்களில் இந்தோனேசிய நடிகையும், பாடகியுமான அக்னெஸ் மோ முதலிடத்திலும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இரண்டாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் மற்றொரு பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவரை மொத்தம் 1.2 கோடி பேர் பின்தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள பிரியங்கா சோப்ரா, ‘‘என்னை பின்தொடரும் அனைவருக்கும் மிகுந்த நன்றி. நீங்கள் தான் எனது பலம்’’ என ‘ட்விட்டரில்’ பதிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT