பாலிவுட்

ஆண் குழந்தை கொடுத்து கடவுள் ஆசீர்வதித்தார்: பாடகி ஸ்ரேயா கோஷல் பகிர்வு

செய்திப்பிரிவு

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னணிப் பாடகர்கள் பட்டியலில் தேசிய அளவில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர் ஸ்ரேயா கோஷல். 2015ஆம் ஆண்டு முகோபாத்யாயாவைத் திருமணம் செய்தார் ஸ்ரேயா. தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைக் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

"இன்று மதியம் கடவுள் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். இதுவரை நான் அனுபவித்திராத உணர்வு இது. ஷிலாதித்யா, நான் மற்றூம் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எங்கள் குழந்தைக்கான எண்ணற்ற ஆசிர்வாதங்களுக்கு நன்றி" என்று ஸ்ரேயா கோஷல் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்களும், சக கலைஞர்களும் ஸ்ரேயாவுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT