பாலிவுட்

நடிகை சமீரா ரெட்டி குடும்பத்தினருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகை சமீரா ரெட்டி, 2006-ம் ஆண்டில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

2014-ல் தொழிலதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார். இவருக்கு ஹான்ஸ் என்கிற மகனும் நைரா என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில் சமீரா ரெட்டி, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி சிகிச்சை எடுத்து வருவதாக சமீரா ரெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT