பாலிவுட்

குழந்தைகளுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா ஆன ஆமிர் கான்

ஐஏஎன்எஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்னணி இந்தி நடிகர் ஆமிர் கான் கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) வேடம் அணிந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ள ஆமிர் கான், தனது புகைப்படங்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்துள்ள கான், தனது மகன் ஆசாத் மற்றும் அவரது நண்பர்களுக்கு பரிசு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

"கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகளை மகிழ்விப்பதற்காக வீட்டிலேயே கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து புகைப்படம் எடுத்து அதை உங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளேன். அனைவருக்கும் கிற்ஸ்துமஸ் வாழ்த்துகள்" என ஆமிர் கான் கூறியுள்ளார்.

குலாம், பிகே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் புகழ் பெற்ற ஆமிர் கான் அடுத்தபடியாக 'தங்கல்' திரைப்படத்தில் முன்னாள் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத் வேடத்தில் நடிக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் தயாராகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகிறது.

SCROLL FOR NEXT