பாலிவுட்

நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழகம், கேரளா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

மத்திய சுகாதாரத் துறையின் நேற்றைய புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆமிர்கான், மாதவன், சஞ்சய் லீலா பான்சாலி, ஆலியா பட், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கோவிந்தாவுக்கு லேசான தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவரது மனைவி சுனிதா அஹுஜா கூறியுள்ளார்.

57 வயதாகும் கோவிந்தா, கடைசியாக கடந்த 2019-ல் வெளியனான 'ரங்கீலா ராஜா' காமெடிப் படத்தில் நடித்திருந்தார்.

SCROLL FOR NEXT