பாலிவுட்

நடிகை ஆலியா பட்டுக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

நடிகை ஆலியா பட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று புதிதாக 81,466 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 84.61 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது மருத்துவர்களின் அறிவுரையின்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்''.

இவ்வாறு ஆலியா பட் கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலியா பட் நடித்து வரும் ‘கங்குபாய் கத்தியாவாடி’ படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட் விரைவில குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT