'சாய்னா' திரைப்படத்தில் பரீனீதி சோப்ரா. 
பாலிவுட்

சாய்னா நேவாலாக நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு: பரினீதி சோப்ரா

ஐஏஎன்எஸ்

பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் பயோபிக்கில் நடிக்கும் பரினீதி சோப்ரா, அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் எப்படி வரவேற்பார்கள் என்பது குறித்து தனக்கு அச்சமிருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் பரீனிதி, "சாய்னா நேவால் போன்ற ஒருவரது கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அவர் ஒரு சாதனையாளர். மக்கள் என் நடிப்பை எப்படி ஏற்பார்கள் என்பது குறித்து எனக்கு அச்சம் இருந்தது. ஆனால், போஸ்டருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் கட்டுப்படுத்த முடியாத மன உறுதியைக் கொண்டாடும் திரைப்படமாக இது இருக்கும்" என்று கூறியுள்ளார்.

"லட்சக்கணக்கான பெண்களுக்கு சாய்னா உந்துதலாக இருந்துள்ளார். இன்று நமது தேசத்தில் வலிமையான பெண்களின் அடையாளமாகவும், உதாரணமாகவும் இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகத் திரையில் கொண்டு வர பரினீதி அதிகமாக உழைத்திருக்கிறார்" என்று படத்தின் இயக்குநர் அமோல் குப்தா கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படம் குறித்துப் பேசியுள்ளர் சாய்னா, "நம்பவே முடியவில்லை. எனது குடும்பத்தின் தொடர் ஆதரவு காரணமாகத்தான் நான் என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்திருக்கிறேன். எனக்குப் பிடித்த விளையாட்டை ஆடியதில், எனது கனவை நனவாக்கிய அதே நேரத்தில் என் தேசத்துக்கும் கவுரவம் தேடித் தந்ததில் எனக்குப் பெருமை. பரினீதி அற்புதமான நடிகை. நாங்கள் சந்தித்தவுடனேயே நட்பாகிவிட்டோம். இந்தத் திரைப்படத்துக்கு என் வாழ்த்துகள். திரையரங்கில் படம் பார்த்துவிட்டுச் செல்லும் ஒவ்வொருவரும் கனவுகளோடு செல்வார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி 'சாய்னா' பாலிவுட் திரைப்படம் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT