பாலிவுட்

நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

செய்திப்பிரிவு

இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த வழக்கில் நடிகை கங்கனாவுக்கு மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான ‘தலைவி'யில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து சில அவதூறுகருத்துகளை கங்கனா தெரிவித்தார். இதையடுத்துநடிகை கங்கனாவுக்கு எதிராக, மும்பை அந்தேரிபெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அவதூறு கிரிமினல் புகாரை ஜாவேத் அக்தர் தாக்கல் செய்தார்.

அதில், நடிகை கங்கனா அளிக்கும் டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாகவும் அக்தர் கூறியிருந்தார். இதற்காக நடிகை கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில் மார்ச்1-ம் தேதி கங்கனா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று நடிகை கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராக வில்லை. இதையடுத்து அவருக்குஎதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டை நீதிபதி பிறப்பித்தார். மேலும் வழக்கு விசார ணையை மார்ச் 22-ம் தேதிக்கு அவர் தள்ளி வைத்தார்.

SCROLL FOR NEXT