பாலிவுட்

பீட்டா அமைப்பின் விளம்பரத்தில் சோனு சூட்: சைவ உணவுக்கான பிரச்சாரம்

ஐஏஎன்எஸ்

விலங்குகளை நெறிமுறையுடன் நடத்த வேண்டும் என்பதற்கான பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவு விளம்பரத்தில் நடிக்க நடிகர் சோனு சூட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரச்சார விளம்பரத்தில், "இந்த காதலர் தினத்துக்கு அத்தனை மிருகங்களிடமும் அன்பைக் காட்டுங்கள். கனிவான பண்பை விட எதுவுமே அதிகம் ஈர்க்காது. நமது விலங்குகள், பூமி, மற்றும் நம் உடலிடம் நாம் கனிவாக இருப்போம். நமது உணவுத் தட்டிலிருந்து மாமிசத்தை ஒதுக்கி வைப்போம்" என்று சோனு சூட் பேசுகிறார்.

2020ஆம் ஆண்டின் கவர்ச்சிகரமான சைவம் உண்ணும் நபர் என்று சோனு சூடை பீட்டா தேர்ந்தெடுத்தது. இதற்கு முன்னாலும் பீட்டா இந்தியா பிரிவின் சைவ பிரச்சார விளம்பரத்தில் சோனு சூட் பங்கெடுத்திருக்கிறார். மேலும் மெக்டொனால்டின் இந்தியப் பிரிவு சைவ பர்கரை அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற சமூக ஊடகப் பிரச்சாரத்துக்கும் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

நோய் தொற்று காலத்தில் ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளிகள், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப சோனு சூட் உதவினார். இன்னும் எண்ணற்ற நல உதவிகளைச் செய்திருக்கிறார். அனுஷ்கா சர்மா, ஷாகித் கபூர், ஹேமமாலினி, மாதவன் உள்ளிட்டவர்களோடு தற்போது பீட்டாவின் சைவ பிரச்சாரத்தில் சோனு சூடும் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT