பாலிவுட்

விதிகளை மீறியதாக கங்கனா ரனாவத்தின் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கியது ட்விட்டர்

செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான படத்தை ட்விட்டரில் வெளியிட்ட சர்வதேச பாப் பாடகி ரிஹானா, 'ஏன் இதுபற்றி யாரும் பேசுவதில்லை?' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் அளித்த பதிலில், ‘‘காரணம் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிரிக்க திட்டமிடும் தீவிரவாதிகள்’’ என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், ரிஹானாவுக்கு ஆதரவு தெரிவித்த பஞ்சாபைச் சேர்ந்த பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசஞ்சை ‘காலிஸ்தான் தீவிரவாதி’ என்று ட்விட்டரில் கங்கனா பதிவிட்டார். இந்நிலையில், கங்கனாவின் சர்ச்சைக்குரிய பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. ட்விட்டர் விதிமுறைகளுக்கு முரணாக கங்கனா ரனாவத்தின் பதிவுகள் இருப்பதால் அவற்றை நீக்கி இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2 மணி நேரத்தில் கங்கனாவின் 2 ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT