பாலிவுட்

தேச துரோக வழக்கு விசாரணையில் சகோதரியுடன் கங்கனா ரனாவத் ஆஜர்

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான விமர்சனம், மும்பை மாநகராட்சியால் தனது பங்களா இடிப்பு, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துடன் மோதல் என பல சர்ச்சைகளில் கடந்த ஆண்டு நடிகை கங்கனா ரனாவத் சிக்கினார்.

இதனிடையே ட்விட்டரில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டதாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டேலுக்கு எதிராக, மும்பை பாந்த்ராவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் நடிகை கங்கனா ரனாவத், அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் ஆஜராயினர். உடன் அவரது வழக்கறிஞரும் இருந்தார். விசாரணைக்குப் பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT