இன்ஸ்டாகிராமில் நீக்கப்பட்ட புகைப்படம். 
பாலிவுட்

விக்கி கவுஷலின் பிரதிபலிப்பு: புகைப்படத்தை நீக்கினாரா கேத்ரீனா கைஃப்?

ஐஏஎன்எஸ்

நடிகை கேத்ரீனா கைஃபின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் விக்கி கவுஷலின் பிரதிபலிப்பு இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து கேத்ரீனா நீக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பகுதியில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் கேத்ரீனா. இதில் நடிகர் விக்கி கவுஷலின் பிரதிபலிப்பு தெரிந்தது. இதை உணர்ந்த இவர் உடனடியாக அதை நீக்கினார். ஆனால் கேத்ரீனாவின் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தின் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து, ‘அந்தப் புகைப்படத்தை நன்றாக பெரிதுபடுத்திப் பாருங்கள் விக்கி கவுஷலின் பிரதிபலிப்பு தெரியும்’ என்று குறிப்பிட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

விக்கி கவுஷலும், கேத்ரீனாவும் காதலிப்பதாக பாலிவுட்டில் செய்திகள் உலவி வருகின்றன. மேலும் இருவரும் அவரவர் உடன் பிறந்தவர்களை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேத்ரீனா நடிப்பில் 'போன் பூத்', 'சூர்யவன்ஷி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. விக்கி கவுஷல் 'சர்தர் உத்தம்' என்கிற பயோபிக்கில் நடிக்கிறார். நகைச்சுவைத் திரைப்படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT