பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஓட்டுநருக்கும், இரண்டு ஊழியர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சல்மான்கானும் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க முடிவெடுத்துள்ளனர்.
தொற்று உறுதியான மூன்று பேரும் மும்பையில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் சல்மான் தரப்பிலிருந்து வரவில்லை. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். கரோனா பிரச்சினையால் இந்தப் படப்பிடிப்பும் தடைப்படும் என்று கூறப்படுகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் 'ராதே' என்கிற திரைப்படத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் இந்தத் திரைப்படம் கரோனா நெருக்கடியால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திஷா படானி இதில் நாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஓடிடியில் வெளியாகலாம் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 'கிக் 2', 'கபி ஈத் கபி தீவாளி' ஆகிய திரைப்படங்களும் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வருகின்றன.