பாலிவுட்

நீண்ட இடைவெளி ஏன்? - சுஷ்மிதா சென் விளக்கம்

ஐஏஎன்எஸ்

2015ஆம் ஆண்டு வெளியான ‘நிர்பாக்’ என்ற வங்காள திரைப்படத்துக்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக திரையுலகிலிருந்து விலகி இருந்தார் நடிகை சுஷ்மிதா சென்.

இந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஆர்யா’ என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தொடரை ராம் மத்வானி, சந்தீப் மோடி, வினோத் ராவத் உள்ளிட்டோர் இயக்கியிருந்தனர்.

இந்நிலையில் இந்த நீண்ட இடைவெளி குறித்து சுஷ்மிதா சென் கூறியுள்ளதாவது:

வேகமாக ஓடிய கடந்த ஐந்து ஆண்டுகாலத்தை நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்திக் கொண்டேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழிலுக்கும், மனநலத்துக்கும், சமூக உறவுக்கும் இந்த இடைவெளி எனக்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. என்னுடைய எண்ணங்களை ஒன்றிணைக்கவும், உலகை வித்தியாசமாக அணுகவும் இந்த காலகட்டம் பயன்பட்டது. வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் இணைந்திருக்க நாம் நமக்கென்று ஒரு வழியை உருவாக்க வேண்டும்.

‘ஆர்யா’வுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அற்புதமான மனிதர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இத்தொடருக்கு கிடைத்த வரவேற்பு எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு அற்புதமான பயணம். இதன் இரண்டாவது சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT