பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக, பல்வேறு கருத்துகளை நடிகை கங்கனா பேசியிருந்தார்.
இந்நிலையில் மும்பை பாந்த்ரா, பாலி ஹில்லில் உள்ள கங்கனாவின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி அவரது பங்களாவின் ஒரு பகுதியை இடித்தது. இதை எதிர்த்தும் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டும் மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஜே.கதவாலா, ஆர்.ஐ.சாக்ளா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. வழக்கு விசாரணை நேற்று நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். -பிடிஐ