பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என போதை மருந்து தடுப்புப் பிரிவு அறிவித்திருப்பதாக வந்த செய்திகளைப் பிரிவின் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
சுஷாந்த் சிங் வழக்கை சிபிஐ மும்முரமாக விசாரித்து வருகிறது. போதை மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் போதை மருந்து வாங்கியது தொடர்பாக ரியாவின் காதலி, ரியாவின் சகோதரர் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வாட்ஸ் அப் உரையாடல்களை வைத்து தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், கரிஷ்மா, சாரா அலி கான் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை பல மணி நேரம் இவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சுஷாந்துடன் 'கேதர்நாத்' திரைப்படத்தில் அறிமுகமான சாராவிடமும் ஐந்து பணி நேரங்களுக்கு மேல் விசாரணை நடந்தது.
ஆனால் இந்த விசாரணையில் என்ன கேட்கப்பட்டது, என்ன தெரியவந்தது என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் இந்நாள் வரை கதை செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களும், நடிகைகளிடம் நடந்த விசாரணையில் தெரியவந்த தகவல்களும் ஒத்துப் போகின்றனவா என்பது குறித்தும் தெளிவு தரப்படவில்லை.
தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என போதை மருந்து தடுப்புப் பிரிவு அறிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இது தொடர்பாக "போதை மருந்து தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்த நபர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியிருப்பதாக வந்திருக்கும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கும் இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று போதை மருந்து தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.