'சூர்யவன்ஷி' படத்துக்குப் பிறகு, மீண்டும் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான படம் 'சிம்பா'. 'டெம்பர்' ரீமேக்கான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் புரிந்தது. இந்தக் கதாபாத்திரத்தையும் தனது போலீஸ் படங்களின் கதாபாத்திரங்களுடன் இணைத்தார் ரோஹித் ஷெட்டி.
தற்போது 'சிங்கம்', 'சிம்பா' ஆகிய கதாபாத்திரங்களுடன் அக்ஷய் குமார் கதாபாத்திரத்தை இணைத்து 'சூர்யவன்ஷி' படத்தை உருவாக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும், இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகவில்லை. திரையரங்குகள் திறந்தவுடன் இந்தப் படம் வெளியாகும்.
இதனிடையே, 'சூர்யவன்ஷி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரோஹித் ஷெட்டி - ரன்வீர் சிங் கூட்டணி இணையவுள்ளது. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து இந்தப் படம் உருவாகவுள்ளது. ரன்வீர் சிங் படத்தை முடித்துவிட்டுத் தான் 'கோல்மால் 5' படத்தை இயக்கவுள்ளார் ரோஹித் ஷெட்டி.