மீடூ சர்ச்சையில் சிக்கியுள்ள அனுராக் காஷ்யப்புக்கு டாப்ஸி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னிடம் அத்துமீறி மிகவும் மோசமான முறையில் நடந்தார் என்றும் பிரதமர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை பாயல் கோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (செப்டம்பர் 19) குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தப் புகாரால் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, பாயல் கோஷ் புகாருக்கு அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனுராக் காஷ்யப்பின் நெருங்கிய நண்பரான நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எனக்குத் தெரிந்து நீங்கள் ஒரு மிகப்பெரிய பெண்ணியவாதி நண்பா.. நீங்கள் உருவாக்கும் உலகில் பெண்கள் எவ்வளவு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்தவர்கள் என்பதை உணர்த்தும் ஒரு கலைப்படைப்பின் படப்பிடிப்பில் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்"
இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுடன் அனுராக் காஷ்யப் உடன் நடித்துச் செல்லும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் டாப்ஸி