சுபாஷ் கை - மஹிமா 
பாலிவுட்

மஹிமாவின் குற்றச்சாட்டுகள் வேடிக்கையாய் இருக்கின்றன: இயக்குநர் சுபாஷ் கை 

ஐஏஎன்எஸ்

தன்னை துன்புறுத்தி, எந்தத் தயாரிப்பாளரும் தன்னுடம் பணியாற்றக் கூடாது என்று செய்தி பரப்பியதாக இயக்குநர் சுபாஷ் கை மீது நடிகை மஹிமா சவுத்ரி கூறிய குற்றச்சாட்டுக்கு சுபாஷ் கை பதிலளித்துள்ளார்.

1997ஆம் ஆண்டு சுபாஷ் கை இயக்கிய பர்தேஸ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மஹிமா சவுத்ரி. சமீபத்தில் ஒரு பேட்டியில் அன்றைய கால்கடத்தில் சுபாஷ் கை தன்னை துன்புறுத்தியதாகவும், இல்லாத இரு ஒப்பந்தத்தைக் காட்டி அவரைக் கேட்காமல் யாரும் தன்னை நிகழ்ச்சிகளில் தோன்றவோ, படங்களில் நடிக்கவோ அணுகக்கூடாது என்றும் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தாகக் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதனால் தான், ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா திரைப்படத்தில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டதாக மஹிமா கூறியுள்ளார்.

மஹிமாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்திருக்கும் சுபாஷ் கை, "இந்த செய்தி வேடிக்கையாக உள்ளது. நானும் மஹிமாவும் இன்று வரை நல்ல நண்பர்கள். குறுஞ்செய்தி மூலமாக இன்னும் தொடர்பில் இருக்கிறோம். இன்று அவர் மிகவும் இனிமையான, முதிர்ச்சியடைந்த ப்ண்மணி. 23 வருடங்கள் கழித்தும் பர்தேஸ், ஐ லவ் மை இந்தியா படங்களிலிருந்து பாடல்கள் ஒலிக்கப்பட்டு தான் ஒவ்வொரு நிகழ்விலும் வரவேற்கப்படுவது குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

1997ஆம் ஆண்டு, பர்தேஸ் வெளியீட்டுக்குப் பிறகு சின்ன பிரச்சினை இருந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்காக மஹிமாவுக்கு சிறந்த நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதும் கிடைத்தது. எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு விதியை மீறியதற்காக அவருக்கு என் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியது. ஊடகங்களும் துறையில் பலரும் இதற்கு பெரிய அளவில் எதிர்வினை ஆற்றினர். எனவே அந்த நோட்டீஸை நான் திரும்பப் பெற்றேன். எங்கள் நிறுவனத்துடன் அவருக்கு இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

3 வருடங்கள் கழித்து அவரது குடும்பத்துடன் என்னை சந்தித்து, அன்று அவரது உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைக்கு மன்னிப்புக் கோரினார். நான் அவரை மன்னித்தேன். அன்றிலிருந்து மீண்டும் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். வேறொருவர் கேட்டபோது தான் துன்புறுத்தப்பட்டதாக அவர் சொன்னது சரியாக இருக்கும்.

2015-ஆம் ஆண்டு எனது கடைசி திரைப்படமான காஞ்சியில் ஒரு பாடலில் அவர் கவுரத் தோற்றத்தில் நடித்த அவரது உயரிய உதவிக்கு நான் அவரை போற்றுகிறேன். பொழுதுபோக்குத் துறை வாழ்க்கையில், பழைய சண்டையை வைத்து சுவாரசியம் தேடுவது என்பது சகஜம் என்றே நினைக்கிறேன் " என்று கூறியுள்ளார்

- ஐ.ஏ.என்.எஸ்

SCROLL FOR NEXT