உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் ஆண் பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இடம்பெற்றுள்ளார்.
அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன் படி 2020ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தி ராக் என்று அழைக்கப்படும் டுவேன் ஜான்ஸன், வின் டீசல், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
87.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டி டுவேன் ஜான்ஸன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். ‘டெட்பூல்’ படத்தில் நடித்த ரயான் ரெனால்ட்ஸ் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவரது வருவாய் 71.5 மில்லியன் டாலர்கள். மார்க் வால்பெர்க் மூன்றாம் இடத்திலும், பேட்மேனாக நடித்த பென் அஃப்லெக் நான்காம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் வில் ஸ்மித், ஜாக்கி சான் உள்ளிட்டோரை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பின்னுக்கு தள்ளியுள்ளார். அக்ஷய் குமாரின் வருவாய் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட 366 கோடி ரூபாயை ஈட்டி ஆறாம் இடத்தை அக்ஷய் குமார் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் 'கேசரி', 'மிஷன் மங்கள்', 'ஹவுஸ்ஃபுல் 4', 'குட் நியூஸ்' என நான்கு சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்தார் அக்ஷய் குமார். மேலும் அமேசான் ப்ரைமில் அக்ஷய் குமார் 'தி எண்ட்' என்கிற தொடரில் நடிக்கவிருக்கிறார். இதுவே அவரது வருவாய் அதிகமாக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
2020ஆம் ஆண்டு உலகளவில் அதிக சம்பளம் பெறும் பிரபலங்கள்:
1. தி ராக் - $87.5 மில்லியன்
2. ரயான் ரெனால்ட்ஸ் - $71.5 மில்லியன்
3. மார்க் வால்பெர்க் - $58 மில்லியன்
4. பென் அஃப்லெக் - $55 மில்லியன்
5. வின் டீசல் - $54 மில்லியன்
6. அக்ஷய் குமார் - $48.5 மில்லியன்
7. லின் - மேனுவல் மிராண்டா - $45.5 மில்லியன்
8. வில் ஸ்மித் - $44.5 மில்லியன்
9. ஆடம் சாண்ட்லர் - $41 மில்லியன்
10. ஜாக்கி சான் - $40 மில்லியன்