பாலிவுட்

திறமை இல்லாமல் சினிமா துறையில் நிலைக்க முடியாது: ராணா

செய்திப்பிரிவு

திறமை இல்லாமல் சினிமா துறையில் நிலைக்க முடியாது என்று முன்னணி நடிகரான ராணா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு முன்னணி திரையுலகப் பிரபலங்களுக்கு இடையே கருத்துப் பகிர்வு தற்போது வரை ஏற்பட்டு வருகிறது.

மேலும், நேற்று (ஜூலை 25) ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியால் மீண்டும் பாலிவுட்டில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. இதனிடையே, வாரிசு அரசியல் தொடர்பாக பல்வேறு முன்னணி பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது வாரிசு அரசியல் தொடர்பாக நடிகர் ராணா கூறியிருப்பதாவது:

"திறமை இல்லாமல் உங்களால் சினிமா துறையில் நிலைக்க முடியாது. வாரிசு அரசியல் என்பது குடும்பம் என்றால் என்ன என்று புரிந்துகொண்டிருக்கிற ஒரு இந்தியனிடம் இருந்து வருவது. கடினமாக உழைத்த ஒரு தந்தை உங்களுக்கு இருந்தால், அவர் அந்த உழைப்பைத் தனது குடும்பத்துக்கு அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதால்தான் வழங்குகிறார்.

எனவேதான் சலுகை வழங்கப்பட்ட மக்களில் ஒரு அங்கமாக நாம் இருக்க முடியும். அதை என்னால் விலக்க முடியவில்லை. அது மிகப்பெரிய பொறுப்போடு வழங்கப்பட்டுள்ளது".

இவ்வாறு ராணா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT