பாலிவுட்

லடாக் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம்: நாயகனாக அஜய் தேவ்கன்?

ஐஏஎன்எஸ்

லடாக் எல்லை தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தை அஜய் தேவ்கன் தயாரிக்கிறார்.

இமயமலையின் லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே பெரியளவில் மோதல் வெடித்தது. இதில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் லடாக் எல்லையில் நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், இதில் அஜய் தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் தேர்வு முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் பட வேலைகள் தொடங்கும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை எஃப்.எஃப் பிலிம்ஸ், செலக்ட் மீடியா ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து அஜய் தேவ்கன் தயாரிக்கிறார்.

வழக்கமாக பயோபிக் மற்றும் நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்களில் அக்‌ஷய்குமார் நடிப்பார். இந்நிலையில் அஜய் தேவ்கனின் இந்த அறிவிப்பு அக்‌ஷய்குமார் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிடும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT