பாலிவுட்

சுஷாந்த் சிங் மரணம் அதிர்ச்சியைத் தருகிறது: பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

சுஷாந்த் சிங் மரணம் அதிர்ச்சியைத் தருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்துக் கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரது திடீர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சுஷாந்த் சிங் ராஜ்புத். ஒரு திறமையான இளம் நடிகர், சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் அவர் திறம்பட மிளிர்ந்தார். பொழுதுபோக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு உந்துதலைத் தந்தது. என்றும் நினைவில் நிற்கும் சில கதாபாத்திரங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். அவரது மரணம் அதிர்ச்சியைத் தருகிறது. அவரது குடும்பத்துக்கு, ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள். ஓம் ஷாந்தி."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT