பாலிவுட்

என் வார்த்தைகள் குழறுகின்றன: இர்ஃபான் கான் மகன் பாபில் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

கடந்த ஏப்ரல் 29 அன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இது பாலிவுட் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தன் தந்தை இர்ஃபான் கான் மறைவுக்கு பிறகு அவரது மகன் பாபில் கான் முதன்முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். எனினும் என்னால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் என் வார்த்தைகள் குழறுகின்றன.

உங்கள் ஒவ்வொருவரிடமும் வந்து பதிலளிப்பேன். ஆனால் இப்போது அல்ல. மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.

இவ்வாறு பாபில் கூறியுள்ளார்.

இர்ஃபான் கானுக்கு சுடாபா சிக்தர் என்ற மனைவியும், பாபில் அயன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

SCROLL FOR NEXT