பாலிவுட்

உலக சினிமாவுக்கு நிறைவான பங்காற்றியவர்: அமிதாப் பச்சன் புகழாஞ்சலி

செய்திப்பிரிவு

உலக சினிமாவுக்கு நிறைவான பங்காற்றியவர் என்று இர்ஃபான் கான் மறைவு குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இந்தி திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"இப்போதுதான் இர்ஃபான் கான் மறைவு குறித்த செய்தியைப் பார்த்தேன். அதிக பாதிப்பையும், வருத்தத்தையும் இந்தச் செய்தி தந்துள்ளது. அற்புதமான திறமை. கருணையுள்ளம் கொண்ட சக நடிகர். உலக சினிமாவுக்கு நிறைவான பங்காற்றியவர். சீக்கிரம் நம்மைப் பிரிந்துவிட்டார். பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்"

இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT