பாலிவுட்

மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்த ரவீணா டண்டன் பிரச்சாரம்

ஐஏஎன்எஸ்

கோவிட்-19 தொடர்பான புரளிகள் பரவுவதை நிறுத்தவும், மருத்துவப் பணியாளர்கள் எதிரான தாக்குதலை நிறுத்தவும் மக்களை அறிவுறுத்த, நடிகை ரவீணா டண்டன், சமூக ஊடகப் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கரோனா தொற்று பரிசோதனை செய்வதற்காகச் சென்ற மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து செய்திகள் அவ்வப்போது வருகின்றன. எனவே இந்த மோசமான நெருக்கடி நிலை பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த நிலையில் மருத்துவர்களின் பணியைப் பாராட்ட வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தி நடிகை ரவீணா ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். #JeetegaIndiaJeetengeHum என்ற ஹாஷ்டேக்கின் மூலம் இந்தப் பிரச்சாரத்தை ரவீணா தொடரவுள்ளார்.

"நமது நிஜ நாயகர்களான நமது மருத்துவர்கள் செவிலியர்களை ஊக்கப்படுத்த நாம் என்ன செய்ய முடியுமோ செய்ய வேண்டும், அது மிகவும் முக்கியம் என நினைக்கிறேன். அவர்கள் தான் உயிர்க்கொல்லியான கரோனா கிருமியோடு ஒவ்வொரு நாளும் போராடுகிறார்கள். நம்மையும், நம் குடும்பங்களையும் பாதுகாப்பாக வைக்க அவர்கள் தங்கள் குடும்பங்களைக் கூட சந்திக்காமல் உள்ளன.

எனவே தான், எனது #JeetegaIndiaJeetengeHum என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். இந்த மருத்துவப் பணியாளர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்றும், அதே சமயம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் இந்தப் பிரச்சாரத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நாம் அனைவரும் இணைந்து வெளிச்சத்தை எதிர்கொள்வோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று ரவீணா பேசியுள்ளார்

SCROLL FOR NEXT