சமீபத்தில் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேரடியாக வீடியோவில் பேசிக்கொண்டிருந்த போது நடுவுல அனுஷ்கா செய்தி அனுப்பியது நெட்டிசன்களின் சமீபத்திய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலியும் பீட்டர்சனும் நேரடியாக வீடியோ மூலம் உரையாடிக்கொண்டிருந்தன. இருவரும் கிரிக்கெட்டைப் பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் கரோனா காரணமாக ஊரடங்கில் இருக்கும் இருவரும், தங்கள் நேரத்தை எப்படிச் செலவழிக்கிறோம் என்பது பற்றியும் ரசிகர்களுக்குப் புரிய வைத்தனர். இந்த உரையாடல் மும்முரமாக வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா இடையில் ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்.
"கிளம்பு கிளம்பு, இரவு சாப்பாடுக்கு நேரம் ஆச்சு" என்ற அந்த செய்தி பீட்டர்சன், கோலியின் ரசிகர்கள் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தி, சிரிக்க வைத்தது.
அனுஷ்காவின் இந்த செய்தியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்திருந்த பீட்டர்சன், "நமது எஜமான் எப்போது நேரமாகிவிட்டது என்று சொல்கிறார்களோ, அப்போது நேரமாகிவிட்டது என்று அர்த்தம். உங்கள் அனைவருக்கும் எங்கள் உரையாடல் பிடித்தது என நினைக்கிறேன். இரண்டு நண்பர்கள் சந்தித்தோம் அவ்வளவே" என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் பிரமதரின் கரோனா நிவாரணத்துக்கான நிதிக்கு விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் நிதி கொடுக்க முன்வந்தது நினைவுகூரத்தக்கது.