பாலிவுட்

'கூலி' படப்பாடலை மருத்துவர்களுக்கு அர்ப்பணித்த அமிதாப் பச்சன்

ஐஏஎன்எஸ்

தான் நடித்த 'கூலி' படத்தில் வரும் பாடலை மருத்துவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கரோனா தொற்றுக்கு எதிராக உலக அளவில் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்களுக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை, மருத்துவர்கள் தங்கள் முதுகில் உலகத்தைத் தாங்குவது போன்ற ஒரு சித்திரத்தை அமிதாப் பகிர்ந்தார். இதுபோன்ற சூழலில் மருத்துவத் துறையின் சேவை, தனக்கு ‘கூலி’ படத்தின் "ஸாரி துனியா கா" என்ற பாடலை நினைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த வரிகளுக்கு 'உலகத்தின் பாரத்தை நாங்கள் சுமக்கிறோம்' என்று பொருள்.

"உண்மை. எனது மகன், மருமகள் இருவரும் மருத்துவத் துறையில் உள்ளனர். சரியான பாடல்" என்று ஒரு ரசிகர் சொன்னதைப் போல சிலர் ஆமோதித்தாலும், சிலர், காவல்துறை, சுகாதாரத்துறை பணியாளர்களையும் நாம் பாராட்ட வேண்டும் என்று பதில் போட ஆரம்பித்துவிட்டனர்.

SCROLL FOR NEXT