ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றிபெற இந்திய நட்சத்திர கிரிக்கெட் அணிக்காக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தானா, ஷாபாலி வர்மா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்படுகிறார்கள்.
இந்தியாவில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்ஷிப்பில் டி20 சர்வதேச போட்டியின் இறுதிச் சுற்றை சந்திக்கும் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லுமா என்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. முன்னதாக பிரதமர் மோடி இந்திய, ஆஸ்திரேலிய இரண்டு அணிகளுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார்.
தற்போது, களத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு உற்சாகம் தரும்வகையில் பாலிவுட் நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கும் வாழ்த்துத் தெரிவித்து கூறியுள்ளதாவது:
''எனது சிறந்ததை சிறந்தவற்றுக்கு அனுப்புகிறது! @ஐஎம்ஹர்மன்பிரீத் மற்றும் குழு, நீங்கள் ஏற்கெனவே எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். நான் இன்னும்
சொல்லக்கூடியது சக் தே பத்தே !!! பி.எஸ். ஹர்மன்பிரீத், உங்கள் பிறந்தநாளில் இன்று சில சாதனைகளை செய்ய மறக்காதீர்கள்'' என்று அக்ஷய் தெரிவித்துள்ளார்.
வீடியோவில், அக்க்ஷய் குமார் கூறுகையில், ''நீங்கள் அனைவரும் இதயத்தை வென்றிருக்கிறீர்கள், இப்போது உலகை வெல்லுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.