பாலிவுட்

ஏப்ரலில் நடிகை ரிச்சா சட்டாவுக்கு திருமணம்

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா சக நடிகர் அலி ஃபாசலை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இந்தத் திருமணம் நடைபெறுகிறது.

கடந்த சில மாதங்களாகவே இருவரும் திருமணத்தைத் திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் மறுத்து வந்தனர். தற்போது தங்கள் திருமணம் தொடர்பாக இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

"இப்போதைக்குத் திருமண பதிவுக்கான தேதி மட்டுமே முடிவு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதத்துக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பதே விதி. ஏப்ரல் கடைசி வாரத்தில் பதிவை வைத்துக் கொள்ளலாம் என இருவரும் திட்டமிட்டு வருகிறார்கள். அதன் பின் திருமண விழா நடக்கும்.

இது ஒரு மகிழ்ச்சியான தருணம், சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை இந்த தருணத்தில் கூறிக்கொள்கிறோம்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிச்சாவும் அலியும் 2013-ஆம் ஆண்டு ஃபுக்ரே என்ற படத்தில் முதலில் நடித்தனர். 2016ல் இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். 2017ல், ஃபுக்ரே படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் சேர்ந்து நடித்தனர்.

SCROLL FOR NEXT