பாலிவுட்

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனரை மணக்கிறார் நடிகை அசின்

செய்திப்பிரிவு

அசினுக்கும், மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

உமேஷ் சுக்லா இயக்கத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ஆல் ஈஸ் வெல்’ இந்தி படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக மும்பை, டெல்லிக்கு பறந்து வருகிறார் அசின். அவர் திருமணத்துக்குப் பிறகு திரைப்படங்கள், விளம்பரப் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இருவீட்டார் சம்மதத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கவுள்ளது. நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதிகளை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT