பாலிவுட்

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பதை பார்வையாளர்கள் நினைக்க வேண்டும்: ஆயுஷ்மான் குரானா

செய்திப்பிரிவு

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பதை பார்வையாளர்கள் நினைக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக இருந்து பாலிவுட்டில் நடிகராக நுழைந்தவர் ஆயூஷ்மன் குரானா. இவர் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் மக்களின் நம்பிக்கைக்கு உரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தனது திரைப்பட அனுபவம் குறித்து ஆயுஷ்மான் குரானா பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். அதில் ஆயுஷ்மான் குரானா பேசுகையில், ''என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படம் எவ்வளவு பணத்தைச் சம்பாதிக்கிறது என்பது அல்ல. நான் வித்தியாசமான சினிமாவிற்காக துணை நிற்கிறேன். அது வித்தியாசமானது. அது உங்களைச் சிந்திக்க வைக்கும். நான் வித்தியாசமான படங்களைக் கொடுக்கும்போது நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்று பார்வையாளர்கள் நினைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் ஒவ்வொரு படத்திலும் இதற்கு முன் தராத என் சிறந்த நடிப்பையே தர விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இது ஒரு கற்றல்தான். நான் ஒவ்வொரு படத்திலும் நடிகனாக உருவாகிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

தவறவீடாதீர்

SCROLL FOR NEXT