பாலிவுட்

அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்: 'கல்லி பாய்' படத்துக்கு ஜாண்டி ரோட்ஸ் புகழாரம்

செய்திப்பிரிவு

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'கல்லி பாய்' படத்துக்கு ஜாண்டி ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், அலியா பட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கல்லி பாய்'. பிப்ரவரி 14, 2019-ல் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், இந்தப் படம் ஆஸ்கர் விருது இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற முடியாமல் வெளியேறிவிட்டது. இந்தப் படத்தின் கதைக்களம், உருவாக்கம் உள்ளிட்டவற்றிற்கு பெரும்பாலான திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான ஜாண்டி ரோட்ஸ் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

'கல்லி பாய்' தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "கடந்த வருடம் ஒரு நிகழ்வில் சித்தாந்த் சதுர்வேதியை சந்தித்ததிலிருந்து 'கல்லி பாய்' படத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஒருவழியாக நேற்று இரவு இந்தியா செல்லும்போது விமானத்தில் முழுப் படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சப் டைட்டில்களுக்கு நன்றி, நான் அழுதேன், சிரித்தேன், சிலிர்த்தேன்" என்று தெரிவித்துள்ளார் ஜாண்டி ரோட்ஸ்.

SCROLL FOR NEXT