ட்விங்கிள் கன்னா 
பாலிவுட்

''வெங்காயம் கிலோ ரூ.200, காதை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்''- ட்விங்கிள் கன்னாவுக்கு ரசிகர் பதில் 

ஐஏஎன்எஸ்

நடிகரும் கணவருமான அக்‌ஷய் குமார் பரிசளித்த புதிய வெங்காயக் காதணிகளை அடிக்கடி பார்த்து மகிழும் ட்விங்கிள் கன்னாவிடம், ''வெங்காயம் கிலோ ரூ.200 மேடம். காதை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ட்விங்கிள் கன்னாவுக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளைப் பரிசாக வழங்கினார். அவரது சமீபத்திய படமான 'குட் நியூஸ்'- ஐ விளம்பரப்படுத்தும்போது 'தி கபில் சர்மா ஷோ'-வில் இருந்து அவருக்கு இது கிடைத்தது.

கணவரிடமிருந்து பரிசாகப் பெற்ற வெங்காயக் காதணிகளுடன் ட்விங்கிள் கன்னா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விவகாரம், சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இன்று தனது வெங்காயக் காதணிகளின் படத்தை மீண்டும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் ட்விங்கிள் கன்னா. தற்போது அதில் தளிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. கணவர் அளித்த வெங்காய காதணிகளை ட்விங்கிள் அடிக்கடி பார்த்து மகிழ்கிறார்.

வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளை அணிந்து ஒரு செல்ஃபி எடுத்து, இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ட்விங்கிள்: “ஒரு படப்பிடிப்பிலிருந்து இன்னொரு படத்துக்கு :) என்று தலைப்பு இட்டுள்ளார்.

''ஒரு படப்பிடிப்பிலிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட என் விலை மதிப்பற்ற பரிசுகளை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தளிர்களை முளைக்கத் தொடங்குவதற்கு முன் :) #OnionsAreAGirlsBestFriends'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ட்விங்கிளின் இந்தப் பதிவின் கீழே ஒரு ரசிகர் நகைச்சுவையாக, ''மேம், வெங்காயம் இந்தியாவில் கிலோ ரூ.200வாக இருக்கிறது. அதனால் கவனமாக இருங்கள். உங்கள் காதுகளுக்கு அது தீங்கு விளைவிக்கக் கூடும்'' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர் எழுதுகையில்: ''ஹா ஹா விலை மதிப்பற்ற ட்விங்கிள் ஜி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விங்கிளின் பதிவும் அதற்கு ரசிகர்களின் பதில்களும் சமூக வலைதளத்தில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT