ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லா மிய பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தொடர் போராட்டங் களை நடத்தி வருகின்றனர். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அரசு பஸ்கள், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டர் வாயிலாக தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆயுஷ்மான் குரானா
மாணவர்கள் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேநேரம் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை ஏற்க முடியாது. இது காந்தி பிறந்த பூமி. ஜனநாய கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்
நடிகை பிரிணீதி சோப்ரா
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் ஜன நாயக நாடு அந்தஸ்தை நாம் இழந்துவிட்டோம். அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டித்தனம்.
விக்கி கவுசால்
நாட்டில் நடப்பது சரியில்லை, நடக்கும் விதமும் சரியில்லை. தங்கள் கருத்துகளை அமைதி வழியில் எடுத்துரைக்க மக்களுக்கு உரிமை உள்ளது. வன்முறையும் குழப்பமும் மிகுந்த கவலை அளிக்கிறது.
பூமி பட்னாகர்
வன்முறையால் நாட்டை முன் னேற்ற முடியாது. ஜனநாயக நாட்டில் கருத்துகளை எடுத்து ரைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதல் வேதனையளிக்கிறது.
ஆலன்கிருதா ஸ்ரீவஸ்தவா
மாணவர்களின் கால்கள் உடைந்துள்ளன. பார்வை பறிபோ யுள்ளது. இருட்டில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சித்தார்த் மல்ஹோத்ரா
மாணவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல. நாட்டில் வன்முறைக்கு இடம் அளிக்கக்கூடாது.
ரித்திஷ் தேஷ்முக்
மாணவர்கள் விவகாரத்தில் போலீஸார் பொறுமையுடன் செயல் பட்டிருக்கலாம். கருத்து சுதந்திரத் துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஹுமா குரேஷி
மாணவர்களிடம் போலீஸார் நடந்துகொண்ட விதம் மோசமாக உள்ளது. அமைதியான வழியில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இருக்கிறது.
நிம்ரத் கவுர்
சஸ்பெண்ட், பாலியல் வன் கொடுமை, தீவைப்பு, கலவரம், வன் முறை, தடை, அடித்துக் கொலை, ஊரடங்கு, இதுதான் இந்தியாவா?
சர்ச்சை `லைக்'
ஜாமியா பல்கலைக்கழக விவ காரத்தில் போலீஸாருக்கு ஆத ரவாக சமூக வலைதளத்தில் வெளி யான வீடியோவை பாலிவுட் நடிகர் அக்சய் குமார், 'லைக்' செய்தார். சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை 'அன்லாக்' செய்துவிட்டார். தவறுதலாக 'லைக்' செய்துவிட்டேன் என்று பின்னர் அவர் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ் யப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "முதுகெலும்பு இல்லாமல் அக்சய் குமார் தற்காப்பு கலைகளில் பயிற்சி மேற்கொள்வது கடினம்" என்று விமர்சித்துள்ளார். "மத்திய அரசு பாசிசத்தை கடைப்பிடிக்கிறது" என்றும் அனுராக் காஷ்யப் குற்றம் சாட்டியுள்ளார்.